நம் முகப்பெருமானுக்கு ஏற்ற தைப்பூச திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கூட மனம் விரும்பி கொண்டாடும் திருவிழாவாகும்.இது தமிழ் கடவுள் முருகனுக்கு உகர்த்த நாள் ஆகும்.

தைப்பூச திருநாள் பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும் காவடி எடுத்துக்கொண்டும் வந்து முருகனை தரிசிப்பதுண்டு. தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகள் எதுவும் நம்மை நெருங்காது என்பது அனைவரது நம்பிக்கை.

மேலும் தைப்பூசம் அன்று முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.உணவு எதுவும் உண்ணாமல் காலை முதல் மாலை வரை அந்த முருகனை நினைத்து கொண்டும் இறைவனுக்கு உகர்ந்த கந்த சஷ்டி கவசம்,முருகன் பற்றி பாடும் பாடல்கள் போன்றவற்றை படிக்கலாம்.

தைப்பூசம் திருநாள் அன்று முருகனை நினைத்து விரதம் இருத்தல் நினைத்த காரியம் நிறைவேறும்.



