இந்த வருடம் கடும் குளிர் தாக்குகிறது கேரளாவை !

இன்றைய சூழலில் தட்பவெப்பநிலை உலகம் முழுவதும் மாறியுள்ளது.தற்போது கேரளாவில் சில தினங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. இந்த வருடம் முதன் முதலாக தென்மலையில் மைனஸ் 3 டிகிரியும், மூணாறு உட்பட சில இடங்களில் மைனஸ் 2 டிகிரியாகவும் வெப்பநிலை குறைந்தது.

ஜனவரியில் வழக்கமாக அதிகபட்சமாக 7 மில்லி மீட்டர் மழை மட்டுமே கேரளாவில் பெய்யும். ஆனால் இந்த ஜனவரியில் 105 மில்லி மீட்டர் மழை பெய்தது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் மழை அதிகளவு பெய்ததால் குளிர்காலம் தொடங்குவதற்கு தாமதமானது. கடந்த சில நாட்ககளாகத் தான் கேரளாவில் கடுமையாக குளிர் வாட்டி வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, மாட்டுப்பட்டி, அமைதி பள்ளத்தாக்கு, செவன்மலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று வெப்பநிலை வெகுவாக குறைந்தது. மூணாறு, அமைதி பள்ளத்தாக்கு, மாட்டுப்பட்டி மற்றும் செண்டுவறை ஆகிய பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக இருந்தது. லட்சுமி என்ற இடத்தில் மைனஸ் 1 டிகிரியாகவும், நல்லதண்ணி பகுதியில் பூஜ்ஜியம் டிகிரியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.