டும் டும் டும்.. கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்குத் திருமணம் !

தமிழக கிரிக்கெட் வீரர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரருமான விஜய் சங்கருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்தது.இவர் வைஷாலி விஸ்வேஸ்வரன் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்த தகவலை சன்ரைசர்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.அந்த பதிவில் இத்தகைய சிறப்பான நாளில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என்று வாழ்த்தியுள்ளனர்.