ரம்மி விளையாட்டின் விளம்பர தூதராக நடித்த நடிகர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது – கேரளா !

ஆன்லைனில் விளையாடும் ரம்மி விளையாட்டுக்கள் பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டுக்கு பலர் அடிமையாகி தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.மேலும் சில பேர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இந்த விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் , கேரளாவில் திருச்சூர் பகுதியை சேர்ந்த பாலி வடக்கன் என்பவர் இந்த விளையாட்டுக்கு எதிராகவும் இதை தடை விதிக்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தெரிவித்தது ,கேரளாவில் 1960 ஆம் ஆண்டின் சட்டம் உள்ளது. இந்த விளையாட்டின் தூதர்களாக இருக்கும் நட்சத்திரங்கள், பார்வையாளர்களை போட்டியில் பங்கேற்க தூண்டுகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விளையாட்டின் விளம்பர தூதர்களான நடிகை தமன்னா, பிரபல மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.