கரோனா பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியது !

கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கடந்த வருடம் உலகமக்கள் அனைவர்க்கும் பெரும் துயரமாக மாறியுள்ளது.தற்போது அதற்கு தடுப்பூசியும் கண்டுபிடித்த பிறகு படி படியாக குறைய தொடங்கியுள்ளது.

மேலும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் கடந்த 7 நாட்களில் நாட்டின் 147 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,01,193 உயர்ந்துள்ளது.

மேலும் அவர் தெரிவித்தது இந்தியாவில் மொத்த கரோனா தொற்று பாதிப்புகளில் 70 சதவீதம் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பதிவாகி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 153 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.147 மாவட்டங்களில் கடந்த 7 தினங்களாக புதிய தொற்று எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.