புருவங்கள் அடர்த்தியாக வளர வேண்டுமா இதோ சில டிப்ஸ் !

முகத்தை அழகூட்டுவதில் புருவத்தின் பங்கு முக்கியமானது.முக அழகு சுமாராக உள்ளவர்கள் கூட புருவத்தை நன்கு பராமரித்து அழகுபடுத்தி கொள்ளலாம்.புருவங்கள் அடர்த்தியாக இருந்தால் முகம் பார்க்க வசீகரமாக இருக்கும்.

புருவங்களில் அதிகம் முடி இல்லாதவர்கள் அடிக்கடி விளக்கெண்ணெய் கொண்டு தேய்த்து வர நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.புருவங்களில் பொடுகு காணப்படுபவர்கள் ஆலிவ் எண்ணெய் தேய்த்து வந்தால் விரைவில் சரியாகும்.

தினமும் இரவில் தூங்க செல்லும் முன்பு ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் பார்க்க புருவங்கள் வசீகரமாக இருக்கும்.புருவங்கள் நன்றாக வளர ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.