பாலியல் புகாரில் சிக்கிய துணை கமாண்டன்ட் சுபாஷின் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் பாலியல் புகாரில் சிக்கிய துணை கமாண்டன்ட் சுபாஷின் பணியிடை நீக்கம் மேலும் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருபுவனையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணமாக ‘சீல்’ வைத்த பகுதியில் ஐ.ஆர்.பி.என்., துணை கமாண்டன்ட் சுபாஷ் பணியில் இருந்தார்.அப்போது, அங்கிருந்த பெண் போலீஸ், துணை கமாண்டன்ட் சுபாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.இதையடுத்து, டி.ஜி.பி., உத்தரவின்படி, சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவு வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது.இதனையடுத்து, துணை கமாண்டன்ட் பணியிடைநீக்க காலத்தை மேலும் மூன்று மாதம் நீட்டிக்க வேண்டி, போலீஸ் தலைமையகம் கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. அந்த கோப்பிற்கு கவர்னர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.இதனால், துணை கமாண்டன்ட் சுபாஷின் பணியிடை நீக்கம், மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.