தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

  • தமிழகத்தில் மேலும் 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,65,930-ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,12,320 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,117 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,371ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1164 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 184429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 84,88,503 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 85,509 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 191 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 43,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,02,216 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,834 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,63,682 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,832 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.