பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன

நாடு இதுவரை கண்டிராத வகையில், தலைநகர் டெல்லியில் கடந்த 9ஆம் தேதி (டிசம்பர், 2020) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.83.71க்கும், டீசல் விலை 73.87 காசுகளாகவும் விற்பனையானது.

இந்த விலை தொடர்ந்து ஆறு நாள்களாக அவ்வாறே நீடித்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் பொதுமக்களிடத்தில் காணப்படுகிறது.

இதற்கிடையில் பெட்ரோல், டீசல் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 மற்றும் ரூ.3.50 காசுகள் உயர்த்த திட்டமிட்டுள்ளன. நம் நாட்டை பொருத்தவரை பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு இரு காரணங்கள் உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்நாட்டில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள நிலையில் 29 காசுகள் அதிகரித்தாலும் தேசிய தலைநகர் இதுவரை பதிவு செய்யாத மிக உயர்ந்த இடத்தில் பெட்ரோல் விலை இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலராக இருந்தபோது, கடைசியாக அவை அக்டோபர் 4, 2018 அன்று லிட்டருக்கு ரூ.84ஐ தொட்டன.

தற்போது ஒரு பீப்பாய்க்கு 49 டாலர் என்ற அளவில் உள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீது மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கலால் மற்றும் வாட் வரியை விதித்துள்ளன.