காங்கிரஸ் கட்சியால் எங்களுக்கு அரசியல் அழுத்தம் இல்லை என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. தற்போதைய மகா விகாஷ் அகாடி கூட்டணி அமைவதில் சோனியா காந்தியின் பங்கும், சரத் பவாரின் பங்கும் முக்கியமானது. கூட்டணி அமைக்கும்போது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வடிவமைத்தோம். அதுகுறித்ததுதான் சோனியா காந்தியின் கடிதம். கொரோனா பாதிப்பின் காரணமாக குறைந்தபட்ச செயல்திட்ட பணிகள் செயப்பட முடியாமல் போனது.
கொரோனா பாதிப்பு அதிகரித்ததான் காரணமாக சில திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மகாராஷ்டிரா மக்களின் நலம் மற்றும் மாநிலத்தின் நலன் மீதுள்ள அக்கறையின் காரணமாக காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருக்கலாம். இது வரவேற்கக் கூடியது. இங்கே அரசியல் அழுத்தம் இல்லை. நாங்கள், காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.



