டிஜிட்டல் தளத்தில் தடம் பதிக்கும் மார்கழி இசை விழா

கொரோனாவின் தாக்கத்தால் மேடை கச்சேரிகள் நடத்த முடியாத நிலையில், இந்த ஆண்டு “Yours Truly, Margazhi” என்ற பெயரில் இணையதளத்தில் அரங்கேற்றம் கண்டுள்ளது இந்த இசை கலாசாரம்.

சென்னை நகர சபாக்கள் கூட்டமைப்பும், கலாகேந்திரா டாட் காம் என்ற இணையதளமும் இணைந்து, செப்டம்பர் மாதம் முதலே கச்சேரிகளை ஒளிப்பதிவு செய்ததாகவும், இதற்கு அமெரிக்காவில் உள்ள சங்கீத சம்மேளனங்கள் பல உதவியதாகவும் கூறுகிறார் கலாகேந்திரா நிறுவனர் சுதாகர்.

மேடை நிகழ்ச்சிகளை போலவே அட்டவணையை பின்பற்றி தேதி வாரியாக நிகழ்ச்சிகள் வெளியிடப் படுகின்றன. மார்கழி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் காணக் கிடைத்த இடத்தில் புதிய நடைமுறையால் 153 நிகச்சிகளை மட்டுமே காணமுடியும். ஆனால், 3650 ரூபாய் கட்டணத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது சிறப்பம்சமாக உருவெடுத்துள்ளது.