ஒரு கிலோ அரிசி 7 ஆயிரம் ரூபாய்

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி கிலோ 7,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இது கின்னஸ் புத்தகத்திலும் சாதனையாகப் பதிவாகியுள்ளது.

நம்மூரில் ஒரு கிலோ அரிசி 35 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாசுமதி அரிசி, பிரியாணி அரிசி ரகங்கள் அதிகபட்சம் கிலோவுக்கு 200 ரூபாய் வரை வைக்கப்படுகிறது.அதேசமயம் கின்மேமை பிரிமியம் (kinmemai premium) என்ற ரக அரிசி கிலோ 7,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உலகில் அதிக விலையுயர்ந்த அரிசி இதுதான்.

உலகின் மிக விலையுயர்ந்த அரிசி என கின்னஸ் புத்தகத்திலும் இந்த அரிசி இடம் பெற்றுள்ளது.இந்த அரிசியை டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் (Toyo Rice Corp) என்ற ஜப்பானிய நிறுவனம் விற்பனை செய்கிறது.