தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர்!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக கவர்னர பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிச்சாமி, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள். அறத்தின் ஆட்சி, ஆணவத்தின் வீழ்ச்சியை குறிக்கின்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து, இன்பம், இனிமை நிறைந்த நன்னாளாக தீபாவளி விளங்கட்டும் என தெரிவித்துள்ளார்.