கலக்கும் கங்கனா ரனோட்..தலைவி பட ஸ்டில்கள் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் கங்கனா நடித்து வருகிறார்.தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி படத்தின் புதிய புரோமோ வீடியோவை கங்கனா நேற்று வெளியிட்டுள்ளார்.

மகளிர் தினத்தன்று வெளியிடப்படுவதால், மகளிர் தின வாழ்த்துக்களுடன் இந்த புரோமோ வீடியோ தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் , பெண்களும் சிறந்தவர்களாக தான் பிறக்கிறார்கள்.

ஆனால் தன்னை தலைவியாக ஏற்றுக் கொள்ள இரும்பு பெண்மணியாக இருப்பது அவசியம் என்ற வாசகங்கள் அதில் உள்ளன.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.