மத்தியப்பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு !

கரோனா தொற்று தற்போது மீண்டும் இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பு முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது.

ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருந்தோ கரோனா பரவல் மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருவதை புரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் ,மத்தியப்பிரதேசத்தில் போபால், இந்தூர் ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

அதே போல் மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப்பிரதேசம் வரும் அனைவருக்கும் கரோனா சான்று கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.