இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தங்கம் விலை தொடர் சரிவை சந்திக்கிறது. ஒரு சில நாட்களில் விலை ஏற்றமடைந்தாலும் பெரிதளவில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,183க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.33,464க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கும் விற்பனையாகிறது.