சர்ச்சையில் சிக்கும் பிரிட்டன் அரச குடும்பம் !

இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகியோர் பிரபல தொலைக்காட்சி பேட்டியளித்துள்ளனர்.அதில் அவர்கள் அரச குடும்பத்தில் நிலவும் சில சர்ச்சைகளை பற்றி கூறியுள்ளனர்.

அந்த பேட்டியில் பேசிய மேகன் மார்கெல், ஹாரியின் சகோதரரின் மனைவி கேட் எங்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு கொஞ்ச நேரம் முன்பு என்னை அழவைத்தார்.மேலும் அரசு குடும்பத்தின் நெறிமுறைகள் அப்போது எனக்கு தெரியாது என்றார்.

மேலும் அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று தினத்துக்கு முன்னரே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.அரச குடும்பத்தினர் என்னுடைய குழந்தையின் நிறம் குறித்து கவலை கொண்டனர்.மேலும் எங்கள் மகனுக்கு பட்டம் வழங்கப்படவில்லை என்றார்.