வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு – தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு !

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான விஜயகுமார் என்பவர் சென்னை ஐகோட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதமான, 50 சதவீதத்தை வன்னியர்களுக்குக் கொடுத்துவிட்டால் மீதம் உள்ள சாதியினர் பாதிக்கப்படுவர் என்பதால் சட்டத்தை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.

இதை விசாரித்த நீதிபதிகள்,உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவே வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.