174 தொகுதிகளில் திமுக போட்டி – தமிழக தேர்தல் !

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில்,திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது.

ஆதித் தமிழர் பேரவை கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்தது.மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

இதன்மூலம், 174 தொகுதிகளில் திமுக சட்டப்பேரவை தேர்தலில் போட்டிடுகிறது. அதோடு, திமுக வேட்பாளர்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேட்பாளர்களின் மூலம் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது.