வெளியானது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

தமிழ் சினிமாவின் தலைவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.மேலும் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் செம்ம கெத்தாக உள்ளார் . இந்த படம் இந்த வருடம் தீபாவளி திருநாளில் வெளியாகிறது.

திருவிழா பேக் ட்ராப்பில் ரஜினி செம்ம கெத்தாக உள்ளார்.மேலும் இது ஓப்பனிங் சாங்கில் இந்த காட்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.