தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு, மத்திய வங்கக்கடலில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி,தென்மாவட்டங்கள்,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.