வாகனங்களில் இருக்கும் தலைவர்கள் படங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு !

தமிழ்நாட்டில் வாகனங்களில் இருக்கும் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு படங்கள் ஒட்டப்பட்டிருந்தால், அந்த படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களில் இருக்கும் தலைவர்களின் புகைப்படங்கள் குறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,தமிழகத்தில் வாகனங்களில் வழக்கறிஞர் / பிரஸ் / போலீஸ் போன்ற ஸ்டிக்கர்கள் அதிகளவில் ஒட்டி உள்ளனர்.இது போன்ற வாகனங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும்.இந்த உத்தரவை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதை மீறினால் அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.