தயாரிப்பாளரும் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளருமான மகேஷ் கொனேரு காலமானார் !

தெலுங்குத் திரையுலகில் தயாரிப்பாளராகவும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த மகேஷ் கொனேரு காலமானார்.

கான்சே, பாகுபலி உள்ளிட்ட படங்களின் விளம்பர வடிவமைப்பில் இவர் பங்கேற்றுள்ளார்.டோலிவுட்டின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கு பர்சனல் பி.ஆராக பணியாற்றி வந்தவர் மகேஷ் கொனேரு.

மேலும் இவர் 118 ,’மிஸ் இந்தியா’, ‘போலீஸ் வாரி ஹெச்சரிகா’, ‘திம்மரசு’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். ‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி ரிலீஸ் செய்தார்.

இன்று காலை திடீர் மாரடைப்பின் காரணமாக மகேஷ் கொனேரு காலமானார். இவரது மறைவிற்கு தெலுங்கு பிரபலங்கள் மற்றும் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.