தமிழ்,தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரேயா.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 ,திருவிளையாடல் ஆரம்பம்,ரௌத்திரம்,அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்தார்.இந்நிலையில்,ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார்.அதில் , குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் வீடியோவை ஷேர் செய்து உலகிற்கு அறிவித்துள்ளார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.மேலும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : தயாரிப்பாளரும் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளருமான மகேஷ் கொனேரு காலமானார் !



