இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடர் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கான விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் விடுமுறை தினங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் ஏடிஎம் இயந்திரங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசு விடுமுறை தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படும். தற்போது இந்தியாவில் நடப்பு மாதம் தசரா, தீபாவளி, ஆயுதபூஜை, விஜயதசமி, நவராத்திரி போன்ற போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளது. இந்த நிலையில் வங்கிகளுக்கு அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தில் இம்மாதம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வருகிற 14 ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக சென்று வங்கியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் இருத்தல் காலம் தாழ்த்தாமல் 14 தேதிக்கு முன்னரே அதை முடித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் அனைத்து வங்கி தொடர்பான வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்டதால் 24 மணி நேரமும் வீட்டிலிருந்தே மொபைல் போன் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க: வரும் 13ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் டூவீலர் பறிமுதல்



