உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற கருத்தின் அடிப்படையில் விரைவில் ஜீ தமிழின் சர்வைவர் (Survivor) ஷோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாபிரிக்க தீவு ஒன்றில் நடைபெற போகும் சாகச அடிப்படையிலான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் ஷோவை, 40 ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளித்திரையில் அதிரடி நாயகனாக ஜொலித்து வரும் அர்ஜுன் தொகுத்து வழங்க போவது ஜீ தமிழின் டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆக்ஷன் கிங் டெலி பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார். இது பற்றி உற்சாகம் தெரிவித்துள்ள அர்ஜுன், ” சர்வைவர் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவின் ஒரு பகுதியாக நான் இருப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உலகளாவிய புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கப் போவதை நினைத்தால் உற்சாகமாக இருக்கிறது. சுமார் 3 மாத காலம் ஒளிபரப்பாக உள்ள இந்த சர்வைவரில், போட்டியாளர்கள் தங்கள் அச்சங்களை எதிர்கொள்வதையும், பயத்தை மீறி உயிர்வாழ அத்தீவில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் பார்வையாளர்கள் பார்ப்பார்கள்.



