ஆர்யா மனைவி நடிகை சாயீஷாவின் பிறந்தநாள் !

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளுள் சாயீஷா ஒருவர்.இன்று தனது 24 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.இவருக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் 2019 ஆம்ஆண்டு திருமணம் நடந்தது.

இவர் விவி விநாயக் இயக்கிய 2015 தெலுங்கு திரைப்படமான அகில் மூலம் தனது முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வனமகன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் சாயிஷா அடியெடுத்துவைத்தார்.

அடுத்து கார்த்தியின் சூப்பர் ஹிட் குடும்ப படம் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். அதே ஆண்டில், அவர் விஜய் சேதுபதியின் ஜுங்கா மற்றும் ஆர்யாவின் கஜினிகாந்த் போன்ற இரண்டு வெற்றிகரமான படங்களில் நடித்தார்.காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆர்யா -சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது அம்மாவாக தன் 24 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

.