‘வலிமை’யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்- புகழ்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலிருந்து புகழ் விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து புகழ் பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் “அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? கண்டிப்பாக அனைவரும் நன்றாக இருப்பீர்கள். உங்களுடைய ஆதரவினால் எனக்கு ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளன.

ஆகையால் என்னால் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக சீக்கிரமாக வந்து கலந்து கொள்வேன். ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன். சீக்கிரமாகவே சந்திக்கிறேன். கண்டிப்பாக ‘வலிமை’யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்” எனத் தெரிவித்திருந்தார் புகழ்.