மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி

பார்லிமென்ட் வளாகத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, மனோஜ் பாண்டியன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம், ரவீந்தரநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றதாக தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், பழனிசாமி கூறுகையில், ‘மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம். அமித்ஷாவுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. பிரதமர் மோடியுடன் என்ன பேசினோமோ அதைத்தான் பேசினோம்’. இவ்வாறு அவர் கூறினார்