சூடுபிடிக்கும் டெலிகிராம் பயனாளர்கள்

கடந்த மூன்று நாள்களில் டெலிகிராம் செயலியில் புதிதாக இரண்டரை கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஜனவரி முதல் வாரம் வரை, 50 கோடி பயனாளர்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்திவந்தனர். ஆனால், ஜனவரி 6 முதல் 10வரையிலான காலக்கட்டத்தில் புதிதாக இரண்டரை கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். அதில் இந்தியாவில் மட்டுமே ஒன்றரை கோடி பயனாளர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

உலகின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு சந்தையாக திகழும் இந்தியா, அதிகளவிலான நுகர்வோர்களை கொண்டுள்ளது. அக்டோபர் 30, 2020 நிலவரப்படி, மொத்த தொலைபேசி இணைப்புகள் 117 கோடியாக இருந்தன, அவற்றில் 115 கோடி மொபைல் இணைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.