வண்ணக்கோலம் வாசல் நிறைந்த பொங்கல் திருவிழா..!

தமிழர்கள் பண்டிகையான பொங்கல் இன்று நாடு கடந்து வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், தை 3-ம் தேதி காணும் என்றும் என்று அதற்கு தை 4-ம் தேதி திருவள்ளுவர் தினம் என்றும் ஆண்டுதோறும் தமிழர்களால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

தமிழர்கள் ஆண்டு முழுவதும் எத்தனை எத்தனை பண்டிகைக்களைக் கொண்டாடினாலும் தமிழர்களின் பண்டிகை என்பது பொங்கல்தான். அறுவடை நாளை சிறப்பிக்கும் ஒன்றாக பாரம்பரியமாக பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்தில் இருந்துவருகிறது. நாடு முழுவதும் பரவி வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.