டெலிகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிசியால் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1200% அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்சார் டவர் நடத்திய ஆய்வில் இந்த இரண்டு செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1,200 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த டேட்டாவின்படி, ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் மொபைல் போன்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்து ஓராண்டு இடைவெளியில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 98 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 161 மில்லியன் பயனர்களை டெலிகிராம் கொண்டுள்ளது. சிக்னல் செயலியைப் பொறுத்தவரை முதல் முறையாக பதிவிறக்கம் செய்தவர்களின் கணக்கீட்டின் அடிப்படையில் 1,192 விழுக்காடு அதிகரித்துள்ளது.