கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – டெல்லி !

No lockdown in delhi : முழு ஊரடங்கு தற்போது இல்லை
முழு ஊரடங்கு தற்போது இல்லை

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளது.தொற்று அதிகம் பரவும் இடங்களாக மகாராஷ்டிரா ,டெல்லி ,கர்நாடகா இருந்து வருகிறது.

டெல்லியில் மே 24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் அல்லது குடும்பத் தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கணவர் உயிரிழந்திருந்தால் மனைவிக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமும், மனைவி உயிரிழந்திருந்தால் கணவருக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமும் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.