இந்தியாவில் 2 முதல் 3 அணைவருக்கும் தடுப்பூசி என்பது சவாலான காரியம் – சீரம் நிறுவனம் !

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனர் ஆனால் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (கோவிஷீல்டு), பாரத் பயோடெக் (கோவேக்சின்) ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘உலகில் அதிகமான மக்கள் தொகையை கொண்டு நாடுகள் பட்டியலில் நாம் இருக்கிறோம்.

இதுபோன்று நாட்டில் 2 முதல் 3 மாதங்களில் கரோனா தடுப்பூசியை செலுத்திட வேண்டும் என்பது முடியாத காரியம். ஒட்டுமொத்த உலக மக்களும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள 2 முதல் 3 வருடங்கள் ஆகும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.