பள்ளிகள் பிப்ரவரியில் திறக்கப்படும் – தெலுங்கானா அரசு !

கரோனா தொற்று உலகையே உலுக்கிய நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பெரும்பாலானோர் பெற்றோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, அதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முடிவெடுக்க தெலங்கானா தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் கலந்தலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில், பிப்ரவரி மாதம் முதல் 9, 10, பி.யூ.சி வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வி அமைச்சர், அலுவலர்களுக்கு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளதாக தெலங்கானா பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.