பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு !

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைத்தாளர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 2000 பரிசாக அறிவித்தது.மேலும் பண்டிகை நெருங்கும் நேரத்தில் பரிசு தொகை பெறுவதற்கான கால அவகாசத்தை அரசு நீடித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த 4ம் தேதி தொடங்கியது.
இந்த குறிப்பிட்ட நாளில் பொருட்களை பெறாதவர்களுக்கு 13ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபாடின்றி வழங்க ஏதுவாக 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் விடுமுறை நாள் தவிர பிற நாட்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.