செல்ல மகள் வருகை, மகிழ்ச்சியில் விராட்..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமானச் செய்தியினை விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியினை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரது அன்பு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள் ஆகியவற்றுக்கு நன்றி.

அனுஷ்காவும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அதித்யாயத்தை தொடங்குவதை ஆசிர்வாதமாக கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு கிரிக்கெட் பிரலங்களும், ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

நீண்ட காலமாக காதலித்து வந்த விராட் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடி கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.