தோனியின் மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்தது 12ஆம் வகுப்பு மாணவன்!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தால், தோனியின் ஐந்து வயது மகள் ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவனை காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

இது குறித்து மேற்கு கட்ச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் கூறுகையில், ‘சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவன் குஜராத்தைச் சேர்ந்தவன் என ராஞ்சி காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, அவர் 12ஆம் வகுப்பு மாணவன் எனக் கண்டறிந்தோம். கேகேஆருக்கும், சிஎஸ்கேக்கும் இடையே நடந்த போட்டியில் தோனி சிறப்பான ஆட்டத்தை ஆடாததால் தான், தான் அவ்வாறு பதிவிட்டதாக 16 வயது சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆஜர்படுத்தவுள்ளோம்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.