திடீரென்று முடங்கிய இ-பதிவு இணையதளத்தால் பொதுமக்கள் அவதி !

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் படி இன்று முதல் காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது.

தானாக முதலீடு செய்து சுய தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை தொடங்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று காலை முதல் பல லட்சம் பேர் இ-பதிவிற்கு விண்ணப்பித்ததால் அதற்கான இணையதளம் முடங்கியது.

இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் கூறுகையில், இன்று ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இ-பதிவு இணையதளம் முடங்கியது.விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.