இந்தியாவின் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்ட கோஹ்லி காலமானார்!

நாட்டில் தொழில்நுட்பப் புரட்சிக்கு முன்னோடியாக இருந்த டிசிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் எஃப்.சி. கோஹ்லி, இன்று தனது 96ஆவது வயதில் காலமானார்.
1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய கோஹ்லி, டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு படிப்படியாக உயர்ந்த அவர், 1970ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் இயக்குநராக உயர்ந்தார்.1969ஆம் ஆண்டு செப்டம்பர் கோஹ்லி டிசிஎஸ்ஸின் பொது மேலாளரானார்.

1994ஆம் ஆண்டில், டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவில் மிக முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் நிறுவனத்தை இந்தியாவுக்கு அழைத்துவந்து டாடா-ஐபிஎம் நிறுவனத்தை உருவாக்கினார்.1999ஆம் ஆண்டு தனது 75 வயதில் கோஹ்லி ஓய்வுபெற்றார். அவர் ஒய்வு பெற்றாலும், அவர் வித்திட்ட தொழில்நுட்பப் புரட்சி மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி துறையாக உருபெற்றுள்ளது.