நாங்கள் அரசு கிடையாது எங்களிடம் கஜானா இல்லை- கமல்ஹாசன்

விளம்பர பலகைகள் விழுந்து ஏற்படும் மரணம் இன்னமும் நடைபெறுகின்றது. நாங்கள் அரசு கிடையாது. அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன் சைதாப்பேட்டையில் உள்ள முகாமில் பார்வையிட்டுள்ளார்.

பின்னர் 250 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய கமல்ஹாசன், “விளம்பர பலகைகள் விழுந்து ஏற்படும் மரணம் இன்னமும் நடைபெறுகின்றது. நாங்கள் அரசு கிடையாது. அரசிடம் உள்ளது போல் எங்களிடம் கஜானா இல்லை. எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். நிவாரணம் என்பது இந்த வருடத்திற்கானது. ஆனால் இப்பொழுது முடிவு செய்து நிரந்தரமான நிவாரணம் அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.