26 சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் உயர்வு – தமிழகம் !

தமிழகம் முழுவதும் சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். நள்ளிரவு முதல் இது அமலுக்கும் வந்தது.இந்த புதிய கட்டண உயர்வு சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படுகிறது.

பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்களுக்கு இந்த கட்டண உயர்வும் இரு மடங்காக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த புது கட்டணம் உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இந்த 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 85 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கும், பேருந்துகளுக்கும் 270 ரூபாய் இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 290 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.