ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு !

கரோனா தொற்றின் பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவேளை இவைகளை பின்பற்ற அரசு அறிவுத்துகிறது.

வரும் ஏப்ரல் 14-ம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் அரசு விடுமுறைகளும் வழக்கம் போல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.

அதனையொட்டி நாடு முழுவதும் அன்றைய தினம் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.