ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய தடை !

ரயில்களில் பயணிப்போர் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை செல்போன்களை சார்ஜ் செய்ய அனுமதியில்லை. தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியது , ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்ட்களுக்கு மின் இணைப்பை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதைக் கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.கடந்த 16-ம் தேதி முதல் ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் அனைத்து விதமான பிளக் பாயிண்ட்களிலும் மின் இணைப்பை நிறுத்தியுள்ளது ரயில்வே.