தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடமாவட்டங்களில், சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையின் மாநகரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தீவிரமானதால் நள்ளிரவு மற்றும் அதிகாலை வரை அதிக குளிர் நிலவுகிறது. ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர் மின்சக்தி மற்றும் பாசனத்திற்கு பயன்பட்டு வரும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

திருப்பூரில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.