முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது – தமிழகம் !

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

கரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது.நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கரோனாவின் 2 ம் அலையை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதி.