தமிழக தேர்தலுக்கு ரூ.744 கோடி செலவு !

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இதன் முடிவுகள் மே 2 ம் தேதி அறிவிக்கப்பட்டது.இதில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

கொரோனா தொற்று இருக்கும் காலக்கட்டத்தில் இந்த தேர்தல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடந்தது.இந்நிலையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செலவு ரூ.744 கோடி என அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் கோவிட் பரிசோதனை, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு கை கிளவுஸ் போன்றவைகளும் வழங்கப்பட்டன.ஏற்கனவே ரூ.618 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.126 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.