தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு உருவாகிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. என்னதான் கொரோனாவை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கடைசியில் தோல்வியிலே முடிகிறது. இந்நிலையில் தடுப்பூசி ஒன்று மட்டுமே தமிழக அரசின் முழு நம்பிக்கையாக இருந்து வருகின்றது.

கடந்த மூன்று மாதங்களாக மக்களை சூறையாடி வந்த கொரோனா இரண்டாவது அலை படி படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பல மடங்கு குறைந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளர் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு வெறும் 61,000 தடுப்பூசிகள் மட்டும் தான் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 1.34 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.