தமிழகத்தில் 5மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு சத்திஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.