ரஜினி-கமல் சந்திப்புக்கு காரணம் என்ன?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.

வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கமல், ரஜினியிடம் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு கட்சிக்கும் இதுவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதல் அவரது ஆதரவை பெறுவதற்கு பல கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.